வவுனியாவில் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற இளைஞனை காணவில்லை !

வவுனியாவில்  வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற இளைஞனை காணவில்லை !

வவுனியா புதுக்குளம் நீர் தேக்கத்தில் கனமழையினால் நீர் நிறைந்திருக்கும் நிலையில் நீர் தேக்கத்தை பார்க்க சென்ற இளைஞன் ஒருவன் தேக்கதில் இறங்கிய நிலையில் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போயுள்ளான். 

குறித்த நீர் தேக்கத்தை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர். இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இன்றையதினம் மதியம் அங்கு சென்றுள்ளார். 

இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. 

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், காவல்துறையினர் மற்றும் பிரதேச வாசிகளால் இளைஞரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பகிர்ந்துகொள்ள