வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது!

You are currently viewing வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது!

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிசார் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments