விக்கியை நலம் விசாரிக்க சென்ற சிறீலங்கா ஜனாதிபதி!

You are currently viewing விக்கியை நலம் விசாரிக்க சென்ற சிறீலங்கா ஜனாதிபதி!

யாழ்ப்பாணம் வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீடு தேடிச் சென்று, சந்தித்தார். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்றையதினம் ரணிலை நேரில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்னை சந்திக்க வரப்போகிறார் என அறிந்த அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் என சிந்தித்தார்கள். அவர் என்னை சுகம் விசாரிப்பதற்காகவே வந்தார். அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கான சந்திப்பாக அமையவில்லை.

சந்திப்பில் பொது வேட்பாளர், ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடிய நிலையில் அவரது அநேகமான கருத்துக்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக நாடு பூராக நடைமுறைப்படுத்தும் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பேசினார்.

இதன் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகிறீர்கள் அது சாத்தியப்படாது என கூறினார். ஜனாதிபதி வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை என்பதை ரணில் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய மாட்டார்கள் என்றார்.

நான் சிரித்தவாறே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை கூறினேன். அத்தோடு இரண்டாம் மூன்றாம் வாக்குகளை வழங்குவது தொடர்பிலும் அவரிடம் கூறினேன். இரண்டாம் மூன்றாம் வாக்கு வழங்கும் நடைமுறையை அவர் ஏற்றுக் கொண்டார். பொது வேட்பாளர் தெரிவு அதற்கான கட்டமைப்பினர் மேற்கொள்வார்கள் அதன் தெரிவை பார்ப்போம் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments