விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பெயர் «மாஸ்டர்»

விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பெயர் «மாஸ்டர்»

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பெயர் «மாஸ்டர்» என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து, விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.  சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி,  உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தளபதி 64′ என்று அழைத்து வரப்பட்ட இந்தப் படத்துக்கு ‘மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். 

இந்தப் படத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!