விலைக்குறைப்பு செய்த “Tesla”! கடும் சீற்றத்தில் பாவனையாளர்கள்!!

You are currently viewing விலைக்குறைப்பு செய்த “Tesla”! கடும் சீற்றத்தில் பாவனையாளர்கள்!!

மின்மகிழூந்துகளில் புகழ்பெற்ற “Tesla” நிறுவனம், தனது “Model – Y” இரக மகிழூந்தின் விலையில் பாரிய விலைக்குறைப்பு செய்துள்ளதையடுத்து, இவ்வகையான வாகனங்களை ஏற்கெனவே கொள்வனவு செய்த பாவனையாளர்கள் கடும் சீற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“Model – Y” ரக மகிழூந்துகளில் “Model – Y”, “Long Range” மற்றும் “Perfomance” என மூன்று வகைப்பட்டவை இருக்கும் நிலையில், இம்மூன்று வகையிலும் விலை குறைவான, “Model – Y” வகை மகிழூந்துகளின் விலையில் சுமார் 140.000 நோர்வே குறோணர்கள் வரை விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வகை மகிழூந்துகளை ஏற்கெனவே கொள்வனவு செய்த வாடிக்கையாளர்கள், தமது வாகனங்களை மீள்விற்பனைக்கு உட்படுத்தும் போது மிக அதிகளவான நட்டத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தவிரவும், முன்பதிவு வரிசையில் மிக நீண்ட காத்திருப்பின் பின் தமது மகிழூந்துகளை பெற்றுக்கொண்டவர்கள், தமது மகிழூந்துகளை பாவிக்காமலேயே மேலதிக விலை வைத்து மீள்விற்பனை செய்வதும் வழமையாக இருக்கும் நிலையில், இவ்வாறு இலாபத்துக்காக மீள்விற்பனை செய்பவர்களின் வயிற்றிலும் பாரிய அடி விழுந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாவித்த வாகனங்களை மீள்விற்பனை செய்யும் நிறுவனங்கள், தாங்கள் ஏற்கெனவே பழைய (உயரிய) விலைக்கு கொள்வனவு செய்த மகிழூந்துகளை, இவ்விலைக்குறைப்பு காரணமாக மிகுந்த நட்டத்துக்கே விற்பனை செய்யவேண்டி இருப்பதாகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, மின்மகிழூந்துகளை நோர்வேயில் சந்தைப்படுத்தும் ஏனைய நிறுவனங்களும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக எதாவது செய்தேயாகவேண்டும் என்ற அழுத்தங்களுக்கும் ஆளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments