ஹமாஸ் தாக்குதலில் கனேடியர் பலி: மொத்த கனேடிய பலி எண்ணிக்கையை கூறிய ட்ரூடோ!

You are currently viewing ஹமாஸ் தாக்குதலில் கனேடியர் பலி: மொத்த கனேடிய பலி எண்ணிக்கையை கூறிய ட்ரூடோ!

ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர்ளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்ததுடன், தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் காஸாவில் 21,500 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது தென் ஆப்பிரிக்கா இனப்படுகொலை குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்குப்பதிவு செய்தது.

அதே போல் பல நாடுகள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், கனடா தனது ஆதரவினை கூறி வருகிறது.

இந்த நிலையில், 8 கனேடியர்கள் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அக்டோபர் 7 அன்று ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின்போது கனேடிய குடிமக்கள் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஜூடி வெய்ன்ஸ்டீனும் ஒருவர் என்பது இப்போது நமக்கு தெரியும்.

இந்த செய்தி என் இதயத்தை உடைக்கிறது. கொல்லப்பட்ட 8 கனேடியர்களின் அன்புக்குரியவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்களின் நினைவு வரமாக அமையட்டும்’ என கூறியுள்ளார்.

அதேபோல் அவரது மற்றொரு பதிவில், ‘வீழ்ந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கையில், ஹமாஸை மீண்டும் ஒருமுறை கண்டிக்கிறோம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments