அக்கரைப்பற்று மரக்கறிச் சந்தையில் 32 பேருக்கு கொரோனா!

You are currently viewing அக்கரைப்பற்று மரக்கறிச் சந்தையில் 32 பேருக்கு கொரோனா!

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று மரக்கறிச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இன்று மாலை வரை 32 பேர் கொரோனோ வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகள் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாள் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மரக்கறிச் சந்தையில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் பேலியகொட கொத்தணி போன்று கிழக்கிலும் கொத்தணி ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்று நகரிலுள்ள மரக்கறிச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 22 பேருக்கு நேற்று எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனையிலேயே 10 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டனர். அவர்கள் உடனடியாகக் கொரோனாத் தொற்றுக்காகச் சிகிச்யைளிக்கப்படும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து குறித்த மரக்கறிச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஏனையவர்களிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனையில் 22 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று மரக்கறிச் சந்தையில் இதுவரை 32 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை சந்தைக்கு மரக்கறிக் கொள்வனவுக்காகச் சென்ற நிலையில் இவர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள