7,300 வீடுகளும், மேலும் 600 நிறுவனங்களும் அக்டோபர் 1 ஆம் திகதி புதிய அஞ்சல் முகவரியைப் பெறுகின்றன. அதேபோல், ஒன்பது நகரங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய அஞ்சல் எண்களைப் பெறுகின்றன.
புதிய அஞ்சல் எண்களைப் (புவியியல் அடிப்படையிலான அஞ்சல் எண் – Postnummer) பெறும் அனைவருக்கும் அவர்களின் தொடர்பாளர்களுக்கு தெரிவிக்க ஊக்குவிக்கிறோம் என்றும், பழைய அஞ்சல் எண்களைக் கொண்டு பொதிகளையும் கடிதங்களையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம், ஆனால் நாளடைவில் தவறான முகவரியானது அஞ்சல் சேவையை தாமதப்படுத்தும் என்றும் அஞ்சல் மேலாளர் Kenneth Pettersen கூறியுள்ளார்.
நோர்வே தபால் சேவை அலுவலகம், ஆண்டுக்கு ஒருமுறை அக்டோபர் 1 இல் அஞ்சல் எண்களை மாற்றி வருகின்றது. அஞ்சல் விநியோகத்தை முடிந்தவரை உகந்ததாக மாற்ற, பயன்பாட்டின் அடிப்படையில் நோர்வே தபால் அலுவலகத்தின் முன்முயற்சியில் இதுவும் ஒன்றாகும்.