அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு நேற்று பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 67 பேர் பயணித்தனர்.
விமானம் கஜகஸ்தான் நாட்டின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, அதிக பனிமூட்டம் நிலவியுள்ளது. இதனால், விமானத்தை கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். அப்போது திடீரென விமானத்தின் மீது பறவைகள் மோதியுள்ளன.
இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கசகஸ்தானின் துறைமுக நகரமான அக்டாவ் அருகே விபத்துக்குள்ளான அசர்பைஜான் எயார்லைன்ஸ் விமானம், ரஷ்யாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த விமான விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 67 பேர் இருந்தனர். அவர்களில் குறைந்தது 38 பேர் இறந்ததாக கசாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறவைகள் கூட்டத்துடன் மோதியதால் விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது என, விமான நிறுவனம் அதன் ஆரம்ப அறிக்கைகளில், குறிப்பிட்டது.
அசர்பைஜானில் உள்ள பாகுவில் இருந்து ரஷ்ய குடியரசின் செச்சினியாவில் உள்ள குரோஸ்னிக்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் திசை திருப்பப்பட்டது.