நினைவேந்தலை தடுக்கும் நடவடிக்கையில் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்களும் அவரின் அரசும்,படையினரும் பொலீசாரும் சர்வதிகாரப்போக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலமை உருவாவகதற்கு முழுப்பொறுப்பினையும் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஜக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை வரை சென்று உள்நாட்டு விசாரணைக்கு சந்தர்ப்பம் கொடுத்து வெளிநாட்டு விசாரணையினை தடுத்து இந்த யுத்தக்குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணை உருவாகுவதை தடுத்து அவர்களை பாதுகாத்து பதவி ஏறுவதற்கு துணை நின்றவர்கள்தான் முழுப்பொறுப்பினையும் ஏற்கவேண்டும். என்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
16.11.2020 முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் உள்ள வன்னிவிளாங்குளும் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் இன்று நடைபெற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் தற்போதுள்ள கொரோனா ஆபத்து அழிவும் நிலவியுள்ள இந்த காலகட்டத்தில் சட்டதிட்டங்களை மதித்து அதனை கடைப்பிடித்து நினைவேந்தலை மேற்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்.
இன்று தமிழ்மக்கள் வடக்கு கிழக்கில் இருந்து மொட்டுகட்சி சுதந்திரகட்சி சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு இந்த அரசிற்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கின்ற தமிழ் பிரதிநிதிகள் அரசிற்கு ஒத்துளைப்பு வழங்குவதும் இந்த ஒடுக்கு முறையினை அரசாங்கம் துணிந்து செய்வதற்கான வாய்ப்புக்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றது இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.