எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு சுட்டுப் போட்டான்கள் இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்..வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார்; அதிர்சி தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் எஸ.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவர் மேற்கொண்;ட துப்பாகி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01)எடுக்கப்பட்டது.
எதிர்வரும் 4ம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா. சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.
ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போது மட்டக்களப்பு பொலிசார் பாக்க மாட்டினம் இதனை சிஜடி யிடம் கொடுக்குமாறு நீதவான் தெரிவிக்கின்றார் ஆனால் அதற்கு பொலிசார் ஒரு பதிலும் கொடுக்கின்றார்கல் இல்லை இந்த ஆட்டோ காரன் தான் எனது பிள்ளையை கொலைக்கு கொடுத்தவன் அவனுக்கு எல்லாம் தெரியும் அவனை பிடிக்கவேண்டும்.
எனது மகன் படுகொலை செய்யப்படு இன்று 100 நாட்கள் கடந்துள்ளதாகவும் 8 வது தடவையாக வழக்கு தவணை போகின்றது பொலிசார் ஒன்றும் தெரிவிக்கவில்லை எறாவூர் பொலிசார் தலைமையில் விசாரணை இடம்பெறுகின்றது.
அவர்கள் பணக்கார் அரசியல்வாதி நாங்கள் ஏழைகள் என்பதால் எதுவும் நடக்கவில்லை இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா எனது மகனின் படுகொலைக்கு நீதிவேண்டும் என படுகொலை செய்யப்பட்வரின் தாயாரான மகாலிங்கம் சின்னப்பிள்ளை கண்ணீர்மல்க தெரிவித்தார்.
கடந்த யூன் மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவரே உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.