அடிமட்ட தமிழ்மக்களின் வாழ்வில் மாற்றம் இல்லாத காரணத்தால் தால் அரசியலில் குழப்பம்-எஸ்.தவபாலன்!
பத்து ஆண்டுகளாக எங்கள் மக்களின் அடிமட்டத்தில் மாற்றம் வராத காரணத்தினால்தான் இந்த அரசியல் குளம்பிப்போய் இருக்கின்றது அரசியல் வெற்றிடமாக இருக்கின்றது அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகின்ற தேவை எழுகின்ற போது அதனை பயன்படுத்தி மக்களின் வாக்குகளை எடுத்துவிடலாம் என்று சிந்திக்கின்றார்கள் இந்த நிலைக்கு தமிழ்மக்களால் வளர்த்துவிட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்புத்தான் காரணம் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 24.07.2020 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்.. https://www.youtube.com/watch?v=BI3FxB0_o5k&t=10s காணெளியினை பார்வையிட..
பத்து ஆண்டுகளாக அரசியலை சரியாக கொண்டு சென்றிருந்தால் அரசியல் வெறுமை ஒன்று ஏற்பட்டிருக்காது முள்ளிவாய்க்கால் போரின் பின்னர் மக்கள் அனைவரும் தமிழ்தேசியத்தினை அடையாளப்படுத்தியே வாக்களித்தோம் கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் மக்களின் வாழ்வியலில் எந்த மாற்றமும் நிகழவில்லை
கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் ஆதரித்த தமிழ் தலைமைகள் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை அடகுவைத்துள்ளார்கள்.அரசியலை சரியாக கொண்டு சென்றிருந்தால் வன்னி மண்ணில் 45 கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் வந்திருக்காது.
பத்து ஆண்டுகளாக எங்கள் மக்களின் அடிமட்டத்தில் மாற்றம் வராத காரணத்தினால்தான் இந்த அரசியல் குளம்பிப்போய் இருக்கின்றது அரசியல் வெற்றிடமாக இருக்கின்றது அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகின்ற தேவை எழுகின்ற போது அதனை பயன்படுத்தி மக்களின் வாக்குகளை எடுத்துவிடலாம் என்று சிந்திக்கின்றார்கள் இந்த நிலைக்கு தமிழ்மக்களால் வளர்த்துவிட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்புத்தான் காரணம்.ஜக்கியநாடுகள் சபையில் இந்த அரசாங்கத்திற்கு நான்கரை ஆண்டுகள் காலஅவகாசம் கொடுத்து காணாமல் போய் தங்கள் பிள்ளைகளை தேடிவந்த கூடாரம் அமைத்து போராடிய 65 பெற்றோர்களை நாங்கள் இழந்துள்ளோம்.
போரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைத்த பெற்றோர்களின் சாட்சியம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமன் என்று எங்கள் மக்களை மக்களுக்குள் சென்று சந்திப்பதற்கு சுமந்திரன் அவர்களுக்கு 16 எஸ்.ரி.எப்.பாதுகாப்பு என்னத்திற்கு இந்த பாதுகாப்பு மடியில் கனம் இருந்தால்தான் மனதில் பயம் இருக்கும் அதுதான் நடக்கின்றது.
சம்மந்தன் ஜயா அவர்கள் இளைஞர்கள் முன்னால் போராளிகள் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்க கேட்டபோது அரசாங்கத்தில் கடமைபடக்கூடாது என்று சொன்னார் பட்டதாரிகள் வேலைதேடி சென்றபோதும் அதனை சொன்னார் ஆனால் கடந்த அரசாங்கத்தில் இறுதியா கொழும்பில் உள்ள அவரின் மாடிவீட்டிற்கு லிப்ட் தேவை என அரசாங்கத்தில் கடமைப்பட்டார் இதுதான் தமிழர்களின் கடந்த அரசியல் வாதிகள் செய்த வேலை.
இந்த தேர்தலில் மக்கள் மாறவேண்டும் மாற்றத்தின் ஊடாக தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.