அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாம் முறையாக நடித்து வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்த படம் பிகில். இப்படம் பெண்களின் சுதந்திரத்தை பற்றிம் பெண் கால்பந்து வீராங்கனைகள் பற்றியும் எடுக்கப்பட்ட ஒரு படம். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல பெண் நடிகைகள் மற்றும் உண்மையான கால்பந்து வீராங்கனைகள் நடித்திருந்தனர். அமிர்தா, இந்துஜா, ரேபா மோனிகா ஜான், வர்ஷா, இந்திரஜா ரோபோ சங்கர், காயத்திரி உள்ளிட்ட நடிகைகள் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர்.
பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தை நம்மால் மறந்துவிட மூடியது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியை கண்டிப்பாக நான் மார்க்க மாட்டோம். அந்த அளவிற்கு சிறந்த முறையில் நடித்திருப்பார் நடிகை இந்திரஜா. இப்படம் தான் இவருக்கு முதல் அறிமுக திரைப்படம்.
இந்நிலையில் இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புதிதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் பிகில் படத்தில் நடித்திருந்த நடிகர் இந்திரஜா இதுவா? என்று கேட்க்கும் அளவிற்கு தெரிகிறார்.
