அணுவாயுத பாவனையை சட்டபூர்வமாக்கும் புதிய சட்ட வரைபில் வட கொரிய அதிபர், “கிம் யொங் உன்” கைச்சாத்திட்டுள்ளார். எக்காலத்திலும் திரும்பப்பெற முடியாத சட்டமாக இயற்றப்பட்டுள்ள புதிய சட்டமானது, வட கொரியா மீண்டும் அணுவாயுத பரிசோதனைகளை செய்வதற்கு வழிவகை செய்கிறது.
நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அணுவாயுதத்தை கையிலெடுக்க முடியுமென வட கொரிய அதிபரின் புதிய சட்டம் மேலும் கூறுகிறது.