அணு ஆயுத யுத்தத்திற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) எச்சரித்துள்ளார்.
ஆனாலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்யாவுக்கு மனநலம் பாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ரஷ்யாவிடமுள்ள அணு ஆயுதங்கள் தற்காப்புக்கு மட்டுமே என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தனது எல்லையைப் பாதுகாக்க ரஷ்யா எல்லா வகையான சாத்தியங்களையும் பயன்படுத்தும் என்றும் அதிபர் புடின்(Vladimir Putin) கூறியுள்ளார்.
இதர நாடுகளில் அணு ஆயுதங்களை அதிகரிக்கச் செய்தது அமெரிக்காதான் ரஷ்யா அல்ல என்றும் அதிபர் புடின்(Vladimir Putin) குற்றம் சாட்டியுள்ளார்.