அதிகரித்துவரும் இளையோரிடையேயான குற்றச்செயல்கள் தொடர்பான கருத்தரஙகு இன்று மாலை 6:00 மணிமுதல் 8:00 மணிவரை Rommen இல் அமைத்துள்ள தமிழர்வள ஆலோசனை மைய கேட்போர் கூடத்தில் மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் மிகவும் ஆரோக்கியமான ஒரு கருத்தரங்காக சிறப்புற நடைபெற்றது.
காவல்துறை அதிகாரி, ஆய்வாளர்கள் உட்பட தமிழ் துறைசார் வல்லுனர்களும், இளையோர்களும் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில், இளையோரிடையே அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு, அவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்கான வழிமுறைகள் பற்றி பேசப்பட்டது.
அரச இயந்திரங்களின் வேலைத்திட்டங்கள், காவல்துறையின் சட்டவரைமுறைகள், பெற்றோரின் பங்களிப்பு, விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இன்றைய கருத்தரங்கிலிருந்து சில புகைப்படங்கள்..
இன்றைய கருத்தரங்கம் அனைவருக்கும் பயனுள்ள விதத்தில் அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, எதிர்காலத்திலும் இதுபோன்ற சமூகச்சிக்கல்கள் சார்ந்த விடயங்களை சீர்தூக்கிப்பார்க்கும் முயற்சிகளை உங்கள் ஆதரவோடு அரங்கேற்றுவோம்..
தமிழ் முரசம் – உங்கள் முரசம்
நோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி
உலகத் தமிழரின் தமிழ்த் தேசிய வானொலி.