அதிகாரப்பகிர்வும் இராணுவமயப்படுத்தலை முடிவிற்கு கொண்டு வருவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான விடயங்கள் என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ் கார்டியனுடனான கருத்துப்பகிர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பெரிதாக்கப்பட்டுள்ள இராணுவம் குறித்து கரிசனை வெளியிட்டு ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இராணுவம் பெரிதாக்கப்பட்டுள்ளதாக காணப்படுகின்றது ரஸ்யாவிற்கு எதிராக போரிட்டுக்கொண்டிருக்கும் உக்ரைன் இராணுவத்தை விட இலங்கை இராணுவம் இரண்டு மடங்கு பெரியது என ஹரி சங்கரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்திற்கு இது குறித்து எழுதிய பின்னர் தான் வோசிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்றுகுழுவின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது தெளிவான கொள்கை ஆவணங்களை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் கனடாவின் நிதியமைச்சர் மற்றும் பிரதிபிரதமர் ஆகியோருடனான சந்திப்பின்போதும் இந்த ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.
கனடா அயர்லாந்து ஆகிய நாடுகளிற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஹரி சங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு ஏற்பட்டதிலிருந்து தனது பேச்சுவார்த்தைகளின் போது இராணுவமயப்படுத்தல்இ நாட்டை மீண்டும் நிலையான பொருளாதார பாதைக்கு கொண்டு செல்வது எப்படி என்பது குறித்த கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை மீண்டும் நிலையான பொருளாதார பாதைக்கு கொண்டு செல்வது என்பது வடக்குகிழக்கிற்கு முழுமையாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதிலிருந்து உருவாகவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிழக்கு அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது வடக்குகிழக்கு தனது தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கு சுயாட்சி அவசியம் என குறிப்பிட்டுள்ள ஹரி சங்கரி வடகிழக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதையும் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வடக்குகிழக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.6 வீதமே பங்களிப்பு வழங்குவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு மாறாக மேல்மாகாணம் 30 வீதம் பங்களிப்பு செய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேச சந்தையை சென்றடைவது அவசியம் வடக்கில் விமானநிலையங்களை திறக்கவேண்டும் கப்பல்போக்குவரத்து மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடு ஆகியன அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் பொருளாதார எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு உள்ளுரில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவசியம் எனவும் ஹரி சங்கரி தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் நகல்வடிவ தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரி சங்கரி தற்போது விவாதிக்கப்படும் தீர்மானம் எதிர்வரும் வருடங்களில் பொறுப்புக்கூறப்படுவதை முக்கிய இலக்காக கொண்டதாக காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நகல்வடிவ தீர்மானம் தற்போது இன்னமும் ஆராயப்படும் விவாதிக்கப்படும் கட்டத்திலேயே உள்ளது இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் அது வலுப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆவணத்தில் உள்ள கொள்கைகளிற்கு பரந்துபட்ட ஆதரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.