அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கலவரத்துக்கு அதிபர் டிரம்ப் அவர்களே காரணமென தெரிவித்திருக்கும் காங்கிரஸ் சபை உறுப்பினரான “Ilhan Omar”, அதிபர் டிரம்ப் அவர்கள்மீது சட்ட ந்டவடிக்கையொன்றை எடுப்பதற்கான முன்னேற்ப்பாடுகளில் தான் ஈடுபட்டுள்ளதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
செய்தி மேம்பாடு:
23:30 – 06.01.2021
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இதுவரை சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த “Gerogia” மாநிலத்தில் ஜனநாயக கட்சியே வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதிபர் டிரம்ப் இற்கு இது மேலும் ஏமாற்றத்தை அளிக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
23:40 – 06.01.2021
தற்போது நடைபெறும் கலவரங்களுக்கு அதிபர் டிரம்ப் அவர்களே காரணமென பல்வேறு அவதானிப்பாளர்களும் கருத்துரைத்துவரும் நிலையில், இவ்வாறானதொரு நிலையை வேண்டுமென்றே அதிபர் டிரம்ப் ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக தனது ஆதரவாளர்களுக்கு உரையாற்றிய அதிபர் டிரம்ப், தனது உரைகளின்போது பலதடவைகள் “6 ஆம் திகதி வோஷிங்டனில் சிந்திப்போம்” எனக்கூறியதை சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர்கள், இக்கலவரங்களுக்கு காரணாமாக இருந்ததோடு, அமெரிக்க காங்கிரஸ் சபைக்குள் நுழைந்து, சபை நடவடிக்கைகளை குழப்பியதோடு, சபையை அவமதித்திருக்கும் தனது ஆதரவாளர்களை கலவரத்துக்கு தூண்டி விட்ட அதிபர் டிரம்ப் மீது முழுப்பொறுப்பும் சுமத்தப்பட்டு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கட்டமாக தெரிவித்துள்ளனர்.
00:45 – 07.01.2021
நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களின் செயற்பாட்டை ஆதரிப்பது போல், அதிபர் டிரம்ப் கருத்துக்களை வெளியிட்டதால், காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் பலரும் அவருக்கெதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான ஒருவர், தொடர்ந்து அமெரிக்க அதிபராக இருக்க அனுமதிக்க முடியாதெனவும், அடிப்படை சட்டவிதிகள் 25 ஆவது நீட்சியின் பிரகாரம் அவரை அதிபர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்குவதோடு, அவர்மீது நீதி விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டுமென பலரும் குரலெழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.