பொய்க் குற்றச்சாட்டில் மாலை தாயகத்தில் நெல்லியடியில் அநீதியாகக் கைதாகி இனவாத அரசின் ஏவல் நிலையத்தில் வன்மத்தோடு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னணியின் இனவுணர்வு கொண்ட சட்டப்போராளிகளால் சுமார் 2 1/2 மணித்தியாளத்தில் போராடி விடுவிக்கப்பட்டார்!
விடுவிக்கப்படும்பொழுதும் தமது எதேச்சை அதிகாரத் தொனியில் “வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவீர்கள்!” என்று மிரட்டல்பாணியில் எச்சரிக்கப்பட்டே விடுவிக்கப்பட்டார்.
ஆனால் கைதின் போதும் புலியின் பொங்கு சினச் சீற்றத்தோடு இனவாதப் பேயை சிங்கள மொழியிலேயே வாதாடி எதிர்த்தார்….கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
மிரட்டி விடுவிக்கப்பட்ட போதும் தந்தையின் மகனாக அஞ்சா நெஞ்சோடு நிமிர்ந்து நின்று அரிமாப் பார்வையோடு எதிரியின் கூலிப்படையை துச்சமாக மதித்து ஏளனப் பார்வை வீசி வீறு நடை நடந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
இப்பொழுது சொல்லுங்கள் இனவெறியரிடம் மண்டியிடாமல் தன்மானத் தமிழனாக மும்மொழிப் புலமையோடு இனத்தின் காவலனாக இது போன்ற சவால்களை எதிர்கொள்ள பாராளுமன்றத்தில் தமிழரைப் பிரதிநிதிப்படுத்த அரசியல் தலைவராக தமிழர்க்காக குரல் கொடுக்க ஒருவர் இவர் போல எவர் உள்ளார்?
இலங்கைத் தீவில் தமிழ் அரசியல்வாதிகளாக தமிழர்க்கு அரசியல் தெளிவோடு உண்மையாக இருப்பதனால்தான் எதிரிகளும் இரண்டகரும் இத்துணை எதிர்ப்பை வெறுப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது வெளிப்படுத்துகின்றனர்!
எதிரிகளைவிட மோசமான அரச ஒத்தோடிகளின் ஒத்தோடித் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கூட வேண்டுமென்றே இன்றைய இந்தச் செய்தியைத் தம் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்ததிலிருந்து தமிழ்த் தேசியத்திற்கு எத்துணை வஞ்சனை உள்ளத்தோடு அவர்கள் இவர்கள் மேல் கொலை வெறியோடு நிற்கிறார்கள் என்பதும் உறுதியாகின்றது!
இச்செய்தி குறித்து கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கூறுகையில்
“எமது அரசியல் இயக்கத்தின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னபலம் அவர்கள் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தவர்களுக்கு அருகில் நின்றதாகப் பொய்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நெல்லியடிப் பொலீசாரால் இன்று 24/10/2024 பி.ப 2.30 மணியளவில்
கைது செய்யப்பட்டார்.” எனக் கூறினார்.
உடன் ஒரு சாதரண தமிழச்சியாக நான் எழுதிய கண்டனம்:
“எதிரி யாரின் போராட்டத்தை, குரலை
அடக்க நினைக்கின்றானோ அவனே உன் இனத்திற்கு உண்மையானவன்!
தமிழினத்தை அடக்கி ஒடுக்குவதில் தற்போதைய அநுர அரசும் சளைத்ததல்ல என்பதற்குச் சான்றாக தாயகத்தில் தேர்தல் பரப்புரையி்ல்
ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமாரை கைதுசெய்த அரச பயங்கரவாதத்தை உலகத் தமிழினமாக வன்மையாக்க் கண்டிக்கின்றோம்!
திரு. கஜேந்திரகுமார் பொன்னபலம் அவர்கள் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தவர்களுக்கு அருகில் நின்றதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நெல்லியடிக் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
காலம் காலமாக நிலவிய சிறிலங்கா இனவெறி அரசுகளின் வாரிசாக செயற்படத் துணிந்த இன்றைய சிங்கள அரசே!
ஈழத் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் தமிழின உணர்வாளர்களின் குரல்வளைகளை நெரிப்பதை உடன் நிறுத்து!
தமிழர்க்காக உண்மையாகக் குரல் கொடுக்கும் திரு. கஜேந்திரகுமாரை உடன் விடுதலை செய்!
ஈழத் தமிழினத்தின் சனநாயக உரிமைகளை மிதிக்காதே!”
என்னைப் போலவே…
உலகெங்குமுள்ள உண்மையானத் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களும் மக்களும் அரசிற்கெதிரான கடுமையான கண்டனத்தை பேரலையான கருத்துக்களாக உடன் தெரிவித்த வண்ணமிருந்தனர்!
பொதுத்தளங்களிலும் உணர்வாளர்கள் இனமானத் தமிழர்களாகத் தமது கடனை ஆற்றினர்!
மக்களின் கருத்துக்கள் இனவெறியரையும் சென்றடைந்திருக்கும்!
“பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை” உடன் அரசு தன் குற்றத்தை இளக்கி விடுதலை செய்ய உலகத் தமிழ் மக்களின் கருத்தியல் போரின் அகோரமும் காரணமாக இருந்திருக்கலாம்…
மக்கள் கருத்துக்கள் தீ போன்றவை! தீயவரை பொசுக்குபவை!
“மக்களிற்கு உண்மையைச் சொல்லுங்கள்! மக்கள் உண்மைக்காகப் போராடுவார்கள்!” என்றார் ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற தோழர் ஹோ சி மின்!
மக்கள் உண்மைகளையும் உண்மை மாந்தரையும் அறிந்து அவர்கள் பின்னால் அனைத்து தளங்களிலும் அணி திரளும்போது விழிப்பு என்ற சாவி கொண்டு விடுதலைக்கான வழிகளின் வாசல்கள் தாமே திறக்கின்றன!
பச்சோந்திகள் போல் வேங்கைகள் நிறம் மாறுவதில்லை!
இது போன்ற தடைகள் பல தாண்டி அனைத்துத் தளங்களிலும் வீரத் தமிழினம் வெற்றி வரலாறு படைக்கும்!
வெற்றி பெற வாழ்த்துக்கள் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கு!
உங்கள் வெற்றி இன்று உறுதியானது