எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 58 வது கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் சூழலில் சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று தணியாத இலட்சிய தாகத்துடன் தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டப் பயணமானது 13/02/2025 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமாகி இரண்டாம் நாளான இன்று (14.02.25 வெள்ளிக்கிழமை) நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் பெரும் எழுச்சியோடும் மனவுறுதியோடும் ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது. கைகளிலே தமிழின அழிப்பின் சான்றுகள் பதாகைகளாக பிடித்திருக்க அகவணக்கம் செலுத்திய பிறகு எமது செயற்பாட்டாளர்களாகிய (தி.ஜெயக்குமார்,பொ.சசிதரன்,ந.கார்த்திகைசெல்வன்,அ.கிரிதரன்)ஆகியோருடன் இணைந்து ஆதரவாளர்களுடன் தனது தாயக விடுதலை சுமந்த பயணத்தை தொடர்கின்றது.