நெதர்லாந்தில் தமிழீழதேசிய மாவீரர் நினைவு நாள் 27-11-2024 புதன் Lelystad பிரதேசத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. 12.40மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, பின் நெதர்லந்து, தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றலைத் தொடர்ந்து மாவீரர் குடும்பங்கள் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். பின் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரையும் தொடர்ந்து அனைத்துலகத் தொடர்பகத்தின் கொள்கை வகுப்பு உரையும் இடம்பெற்றது.
பின்னர் சரியாக 13:35 இற்கு மணியொலி எழுப்பப்பட்டு தொடர்ந்து அகவணக்கமும் அதனைத்தொடர்ந்து துயிலுமில்லப் பாடல் ஒலிக்க கனத்த இதயத்துடன் மாவீரர் குடும்பங்கள் தங்கள் உறவுகளின் திருவுருவப் படங்களிற்கு விளக்கேற்ற அதனைத்தொடர்ந்து வந்திருந்த அனைத்துத் தமிழ் உறவுகளும் அந்தத் தியாகச் செம்மல்களை மனதில் சுமந்தபடி மலர்வணக்கம் செலுத்தினர்.அதன் பின் எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை நாடகம் எழச்சிப் பேச்சு என்பனவும் இடம்பெற்றன.
மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு சுமார் 19.00 மணியளவில் தேசியக் கொடி கையேற்கப்பட்டு பின் நம்புங்ள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோரும் சேர்ந்துபாடி இறுதில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.
27/11/2024 அன்று தமிழீழத் தேசியமாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாண்ட் இல் மாலை 6.30 மணியளவில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்விற்குப் பல்வேறுபட்ட நியூசிலாந்து தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும். பொதுச்சுடரானது நெடுங்கால தமிழீழ ஆர்வலர் ரத்தினவேல் ஆறுமுகப்பெருமாள் அவர்களால் ஏற்றப்பட்டது. நியூசிலாந்து தேசியக் கொடியினை நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாள் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சுமதி அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.
தமிழீழத் தேசியக்கொடியினை லெப்டினன்ட் கேணல் இலக்கியா அவர்களின் தாயார் ரூபேனா ஜோன் மேரி அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது. மாவீரர் நாள் மரபின் படி மணியோசை இசைக்கப்பட்டு,பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது.
பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் கப்டன் அறவழுதி அவர்களின் சகோதரி திருமதி கேஜின் ஏற்றிவைத்தார். பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதையாய் வீழ்ந்த மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் மலர் வணக்கம் செலுத்தினர்.
மேலும் நியூஸிலாந்தில் வசித்துவரும் பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாவீரர் தூபி அமைக்கப்பட்டு, உணர்வெழுச்சியுடன் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து மாவீரர்களின் திருவுரு படங்களால் சூழப்பட்ட அரங்கத்தினுள்ளே நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.
பின்னர் தமிழீழ எழுச்சி பாடல்கள், எழுச்சி நடனம், நாடகம் என பல கலை நிகழ்வுகளோடு சிறப்புரையுடன் இறுதியாகத் தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலுடன் மாவீரர் நாள் பேரெழுச்சியுடன் நிறைவுற்றது.
சுவிசில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 70!
வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த்;தேசியத்தின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை எழுபது தாயகத்திலும், தமிழகத்திலும்,புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும் மற்றவர்களுடன் வாழ்த்துகளையும் ,இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினால் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடாத்தப்படும் பாசல் மாநிலத்தில் messe மண்டபத்தில் தேசிய மாவீரர் நாள் முன்னேற்பாடுகளுக்கு மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை எழுபது எழுச்சியாகவும்ரூபவ் எளிமையாகவும் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் மேதகு எழுபது சார்ந்த சிறப்பு வெளியீடுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் பேச்சுக்கள் எழுச்சிப் பாடல் எழுச்சி நடனம் போன்றவற்றுடன் தமிழீழத் தேசியத்தலைவர் சார்ந்த விபரணத்தொகுப்பும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.
மேலும் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டியில் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் பங்குபற்றியவர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலை அவைரும் இணைந்து பாடியதனைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை
பெல்சியத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2024
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.
என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையை மனதில்
நிறுத்தி மாவீரர் நாள் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியத்தலைவரின் 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து, அனைத்துலகத் தொடர்பகத்தின் 2024 மாவீரர் நாளுக்கான உத்தியோகபூர்வ கொள்கை பகுப்பு அறிக்கை ஒலியலை மூலம் ஒலிபரப்பப்பட்டது.
சரியாகத் தாயக நேரம் மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தி முதன்மைச்சுடர் ஏற்றியவுடன், தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் இன் உயிர்களை ஆகுதியாக்கிய எம் தேசப் புதல்வர்களின் கல்லறைக்கு மாவீரர் குடும்ப உறவுகள் சுடரேற்றியவுடன் மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.
தொடந்து முதல் மாவீரன் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து தேசநிலா இசைக்கலைஞர்கள் மாவீரர் கானம் இசைக்க மாவீரர் குடும்பத்தினர், மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினர் மற்றும் பொதுமக்களாலும் மலர் வணக்கம் செலுத்தி, ஈகைச்சுடரேற்றப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வில் டென்மார்க் நாடாளுமண்ற மற்றும் நகரசபை உறுப்பினர்களின் பேச்சுக்கள், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட உறுப்பினர்களின் சிறப்புரைகளுடன், மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவிதைகள், பேச்சுகள், பாடல்கள், கவிதா நிகழ்வு மற்றும் எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றன.
தொடர்ந்து டென்மார்க் நடனக்கல்லூரி ஆசிரியர்களின், மாணவர்கள் வழங்கிய நடனங்களுடன், டென்மார்க் கலைபண்பாட்டுக் கழகம் தயாரித்து வழங்கிய “தீருவில் தீ” நாடகமும் இடம் பெற்றது.
தொடர்ந்து அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் இணையவழியில் நடாத்தப்பட்ட அனைத்துலக மாணவர்களுக்கான அறிவாடல் போட்டி 2024இல், டென்மார்க்கில் இருந்து கலந்து கொண்டு, வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் இம் மாதம் 3 ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்து ஓவியப்போட்டி 2024 இல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கபட்டனர்.
அனைத்து நிகழ்வுகளும் மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களின் வீரச் செயல்களையும் உணர்த்தியதுடன் மக்களுக்கு எழுச்சியையும் ஊட்டியதாக அமைந்தன.
தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள்.
மாவீரர்களின் தியாகம் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை, அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை இளையோரின் கைகளி் ள்ளது. அத்துடன் தமிழீழம் என்ற இலக்கை அடையும் வரை அயராது செயற்பட வேண்டுமென, இன்றைய நாளின் செயல்பாடுகளின் ஊடாக இளையோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலைத் தொடர்ந்து தேசியக்கொடி கையேந்தப்பட்டு,
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.