ஓகஸ்ட் 30 அன்று அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நாளில் அனைத்துலகத்திடம் நீதி வேண்டி எம் மண்ணில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தாயகத் தமிழ் மக்களின் அவலங்களையும் அவர்களிற்காக நீதி கேட்டு 1600 நாட்கள் கடந்தும் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு உள்ளிட்ட பல கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்திப் போராடும் உறவுகளின் நீதிகோரலையும் உரத்துச் சொல்லிப் போராட வாருங்கள்.
சிங்கள இனவெறி கொண்ட சிறிலங்கா அரசால் கட்டவிழ்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக் காலமான மே 2009 காலப்பகுதியிலும் அதற்கு முன்பும் பின்பும் வலிந்து காணாமலாக கப்பட்ட தம் உறவுகளைத் தேடி இன்றும் பரிதவித்துப் போராடும் உறவுகளின் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் நடைபெறும் பல்வேறு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் வகையில் கனடிய மண்ணில்..
ரொரன்ரோவில் *360 University Avenue*ல் அமைந்துள்ள அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு முன்பாக!
*ஓகஸ்ட் *30 அன்று மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை*
கனடியத் தமிழ்ச் சமூகம் மாணவர் சமூகம் நடத்தும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க அனைத்து கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் உரிமையோடு அழைக்கப்படுகின்றோம்.
*கனடிய தமிழர் சமூகமும் மாணவர் சமூகம் *
416-662-2326