இலங்கையில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

You are currently viewing இலங்கையில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

இலங்கையில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையைத் தயாரிப்பதற்காக, பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான நால்வர் அடங்கிய குழு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.

சிறு சிறு குழுக்களின் ஊடாக, முழு நாட்டு மக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் முறைமையைத் தயாரிக்குமாறும், அக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறு சிறு குழுக்களை அமைத்து, ஜேர்மனியில் இவ்வாறான பரிசோதனைகள் முன்னெடுக்கப் படுகின்றனவென, வைத்திய அமல் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரச மற்றும் தனியார் வசம், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடிய இயந்திரங்கள் 50 மட்டுமே உள்ளன என்றும் அவற்றை வைத்து கொண்டு, ஒரு நாளைக்கு 250 பரிசோதனைகளை மட்டுமே முன்னெடுக்க முடியும் என்றும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பகிர்ந்துகொள்ள