சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்றுத் தொன்மையானதாகக் காணப்படும் தமிழ்ப்புத்தாண்டு மதசார்பற்றதாகக் காணப்படுவதால் எல்லாத் தமிழரும் கொண்டாடிவருகின்றனர். இலக்கியச் சான்றுகள், மக்களின் வழக்காற்றுச் சான்றுகள், கல்வெட்டுச் சான்று, அறிஞர்களின் முடிவு, அறிவியற் பொருத்தப்பாடு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தை முதலே தமிழரின் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரிகேரியன் நாட்காட்டி (Gregorian calendar) சனவரி 15 ம் திகதியினைக் காட்டும் இந்த நாளே திருவள்ளுவர் ஆண்டு 2051 (20201031) ஆகும் நாளன்றே (தை முதலே) தமிழ்ப் புத்தாண்டாகும் தைத்திருநாள், தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு (தை) என்பன அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஆயிரமாயிரமாண்டு தமிழர் மத சார்பற்ற பண்பாட்டு நிகழ்வுகளே தமிழ்ப் புத்தாண்டாகும் .
ஆகவே
தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு பிறந்திருக்கும் இவ்வேளையில் தமிழர்களாகிய நாம் ஒற்றுமையோடு பொங்குவோம் வேற்றுமைகளை வேரறுத்து விடுதலையின் தேர் இழுக்க பாடுபடுவோம், உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ் என்ற ஒற்றைக்கொடியில் திரண்டு அகிலமெல்லாம் அணையாக நிற்போம்.
ஈழத்திலே நடந்தேறிய இன அழிப்பிற்கு நீதிகேட்டு உலகத்தின் முன் ஓர்மையாய் கரம் கோர்ப்போம்.
இந்த ஆண்டு மகிழ்ச்சியும் உயர்ச்சியும் தந்து தமிழரை தரணியில் தலை நிமிர்த்திட கதிரவனை போற்றி நெருப்பாய் நேரிய வழியில் அநீதிக்கு எதிராக குரல்கொடுப்போம் இந்த ஆண்டும் தமிழ்முரசம் வானொலி உங்களோடு இன்பத்திலும் துன்பத்திலும் தோள்கொடுத்து தமிழ்த்தேசியத்தின் குரலாய் பயணித்துக்கொண்டே இருக்கும்.
”பொங்கும் தமிழைப்பொலிவுறச்செய்வோம் ”
”எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம்”
-தமிழ்முரசம் வானொலி-