புத்தாண்டே வருக….
ஏழு
வர்ணங்கள்
ஏறி
விளையாடும்
வான்
மடிதனில்
இருள்
தாங்கிய
இரவுகளின்
பிடியில்
இரவி!
ஆடு
களமாடி
உறுதி
குலையாத
நெடிய
பயணத்தின்
தேடலாய்
விடியலின்
பூக்கள்!
கூடு
குலையாத
குயில்களாய்
பாடென
நாடு
வேண்டிப்
பரணி பாடிய
பாவேந்தர்
பண்
எடுத்து
ஆடமறந்த
மயில்கள்!
கோடு
கடந்து
கேடு விளை
நிலங்களாய் போக
பூமி உருண்டு தழுவும்
புதுக்காற்றிலே
புது இராகமாய்
புது விடியலாய்
அதர்மம்
அகல
ஆணவம்
விலக
அன்பு
தழைக்க
அறம்
நிலைக்க
இன்பமாய்
பிறக்கட்டும்
ஆங்கிலப்
புத்தாண்டு!