அன்னைத்தலைமையின் அதிகார ஆசையால் பறிக்கப்படும் தாய்மொழி உரிமை!!

You are currently viewing அன்னைத்தலைமையின் அதிகார ஆசையால் பறிக்கப்படும் தாய்மொழி உரிமை!!

2010 ஆம் ஆண்டு நம்பிக்கையின் அடிப்படையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுபணியாளராக இருந்த ஒருவரை அன்னை பூபதி கல்வி நிறுவனங்களின் தலைமை அதிகாரிக நியமித்த பிற்பாடு ஏற்ப்பட்ட குழப்பங்களும் குளறுபடிகளும் ஏராளம்.

அதனால் அவரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பதவியை விட்டு தற்காலிகமாக ஒதுங்கி புதியவர்களுக்கு வழிவிடுமாறு கேட்டதிலிருந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவோடு தொடர்புகளை துண்டித்துவிட்டு, அன்னை பூபதி கல்விக்கூடத்தின் கிளை நிறுவனங்களுக்குள் தனக்கு சார்பானவர்களை நிறுத்தி ஆண்டுக்கூட்டத்தில் தான் தொடர்ந்தும் தலைமைப்பதவியை தக்க வைத்திருப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்கி, நிறுவனங்களை பாதுகாக்க எழுதிய யாப்புகளை தனக்கு சாதகமாக மாற்றி, தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்களையும் ஆசிரியர்களையும் விருப்பின்றி சூழ்ச்சிகளால் வெளியேற்றி  தனது சமூகத்துரோக வெறித்தனத்தை வெட்ட வெளிச்சமாக செய்து வந்த நிலையில் பெற்றோர்கள் கடும்போக்கான நிர்வாகத்தை அகற்றி சமூகப்பண்புள்ள ஒரு புதிய நிர்வாகத்தை உருவாக்கத் தொடர் போராட்டங்களை சனநாயகரீதியில் மேற்கொண்டார்கள்.

ஆனால் எதற்கும் செவி சாய்க்காது பெற்றோர்களுடன் தொடர்பாடலை துண்டித்துவிட்டு தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை முடுக்கிவிட்டார் அன்னைத்தலைமை நிர்வாகியும் அவரிடம் அண்டிப்பிழைக்கும் அறம் அற்ற சிலரும், இதன் விளைவு இதுவரை 32 பிள்ளைகளுக்கு தாய்மொழியான தமிழைப்படிப்பதற்கு தடைபோடப்பட்டிருக்கிறது.

இதை தட்டிக்கேட்க முடியாது அறத்தை அடைவு வைத்துவிட்டு தாம் தமிழ் ஆசான் என்றும் தேசியவாதிகள் என்றும் எந்த முகத்தோடு இனியும் சமூகத்தில் வலம் வரப்போகின்றார்கள் என்பதையும் சமூக ஆர்வலர்கள் விசனத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தங்களிடம் அதிகமான பெற்றோர் தொடர்பாடல் இருக்கிறது என்பதற்காக தவறான பரப்புரைகளை பரப்பி தங்களின் சமூகத்துரோகத்திற்கு அவர்களில் சிலரையும் சமூகத்துரோகத்தின் பங்காளிகளாக மாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு தனிமனிதன் அதிகார ஆசை நிறுவன முரண்பாடக மாற்றப்பட்டு எந்தக்கனவோடு பாடசாலை உருவாக்கப்பட்டதோ அந்தக்கனவு தனிமனித ஆசைகளால் நசுக்கப்பட்டு இன்று பிற சமூகத்தின் பார்வைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கும் இந்த அதிகார ஆசை கொண்டவர்களே காரணமும் முழுப்பொறுப்பும் என்பதையும் இங்கு பதிவுசெய்கின்றோம்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக இழிவான செயலாக பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் காணொளி வழி கண்காணிக்கப்பட்டு வருகின்றமை, இந்த செயற்பாடானது மேலும் முரண்பாடுகளை வளர்த்துள்ளது.அன்னைத்தலைமையின் அதிகார ஆசையால் பறிக்கப்படும் தாய்மொழி உரிமை!! 1

 

பாடசாலைக்குள் தகுந்த காரணங்களின்றி, அனுமதியின்றி கண்காணிப்புக்கருவிகள் பொருத்த முடியாது என்பது நோர்வே சட்டத்தில் அடங்குகின்றது ஆனாலும் முன் அனுமதியின்றி பெற்றோர்களின் ஒப்புதலின்றி கண்காணிக்கப்பட்டு வருகின்றமையை நோர்வே செய்தி ஊடகம் பிரசுரித்துள்ளது.  இவ்விடயம் தொடர்பாக அரச கணணித்துறைக்கு முறைப்பாடுகள் அனுப்பப்பட்டு முறைப்பாடுகள் பரிசீலிக்கப்படுகின்றது என்பதனையும் அவ் ஊடகம் எழுதியுள்ளது.

அன்னைத்தலைமையின் அதிகார ஆசையால் பறிக்கப்படும் தாய்மொழி உரிமை!! 2

 

எனவே மக்களின் பணத்தை மீண்டும் மீண்டும் தண்டப்பணமாக கட்டவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதையும் மறுக்க முடியாது

அன்னைத்தலைமையின் அதிகார ஆசையால் பறிக்கப்படும் தாய்மொழி உரிமை!! 3

 

இந்த கண்காணிப்பு காணொளிக்கருவி நிர்வாகத்தில் உள்ள இருவரால் மட்டுமே முடிவுசெய்யப்பட்டு தான்தோன்றித்தனதாக பொருத்தப்பட்டுள்ளது என்பதும் விசனத்துக்குள்ளாகியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply