அன்னைத்தலைமையின் அழைப்பா? தாக்குதலா?

You are currently viewing அன்னைத்தலைமையின் அழைப்பா? தாக்குதலா?

2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு அன்னைத்தலைமை இணைப்பாளராக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் அதிகாரத்தில் இருத்தப்பட்டவர் ஒருசில வருடங்களில் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதன் காரணமாக பல முரண்பாடுகளையும் முட்டுக்கட்டைகளையும் பாடசாலையின் வளர்ச்சிப்பாதையில் ஏற்படுத்தியது.

இதனால் சுமூகமான  கல்விச்சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என பலரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை கேட்டதற்கு அமைய தலைமை இணைப்பாளரை ஒய்வெடுத்து புதியவர்களுக்கு வழிவிட்டால் ஒரு சுமூகமான சூழல் ஏற்படும் என கூறப்பட்டது.

அன்று தொடங்கிய அத்துமீறல்தான் இன்று வரை தமிழர் ஒருங்கிணைப்புக்புகுழுவை அரசகைக்கூலி என்று தனது கைக்கூலிகளை வைத்து போலிப்பிரச்சாரம் செய்கின்ற அளவுக்கு தனது இருப்பிற்காக இரண்டக செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளார்.

இவருடைய  அதிகார அத்துமீறலின் உச்சமாக பெற்றோர், பிள்ளைகள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் இடையில் பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டு சேற்றுக்குள் கால்பதித்து நடக்கின்ற காலச்சூழலை இற்றைவரை உருவாக்கிவிட்டிருக்கின்றது.

இந்த நிலைப்பாட்டை இதுவரை வெளிப்படையாக மக்களோடு கதைக்காது உள்ளுக்குள் உரையாடலை மேற்கொண்டு பாடசாலையில் சீர்நிலையை உருவாக்கும் பல முயற்சிகளை மேற்கொண்ட போது அத்தனையும் தோல்வியில் முடிந்த நிலையில் எதிர்வரும் 12.01.2025  நாளை மாலை 5 மணிக்கு  மக்கள் சந்திப்பை வெளிப்படையாக வைப்பதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

இதனை குழப்பி அடிப்பதற்காக தாம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை சந்திக்க விரும்புவதாக கூறி ஒரு தாக்குதல் அறிக்கை ஒன்றை பொதுவெளியில் அன்னைத்தலைமையால் வெளியிடப்பட்டுள்ளது, அவ்வறிக்கையில் முழுக்க முழுக்க தமிழ்த்தேசிய அமைப்புகளை காயப்படுத்துகின்ற தகவல்தான் பிரதான கருப்பொருளாக எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வகுப்பு பெற்றோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இத்தோடு மட்டும் நின்றுவிடாது தனது கைக்கூலிகளை வைத்து தமிழர் ஒருக்கிணைப்புக்குழு மீதும் அதன் செயற்பாட்டாளர்கள் மீதும் சேறடிக்கும் வேலைகளையும் அன்னைத்தலைமை நிர்வாகம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த சூழல் தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட செயற்பாடுகளுக்கு தடைக்கல்லாக மாறக்கூடிய அபாய சூழலும் தோன்றியுள்ளதை மறுக்க முடியாது.

ஆகவே அன்பான உறவுகளே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மக்கள் சந்திப்பில் நீங்கள் பங்கெடுத்து  எமது சமூகத்தில் புரையோடிய அழுக்குகளை கழுவுவதற்கு உங்கள் கரங்களும் இணையவேண்டும் என்பதைக்கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னைத்தலைமையின் அழைப்பா? தாக்குதலா? 1

பகிர்ந்துகொள்ள

Leave a Reply