அன்னை பூபதியின் 32 ஆவது நினை வேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது சமாதியில் செய்வதற்;குஇன்று ஞாயிற்றுக்கிழமை (19) காவல்த்துறையினர் தடைவிதித்துள்ள நிலையில் அவரது மகள் தனது வீட்டில் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிந்து உணர்புபூர்வமாக ஈகைச்சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தார்.
கடந்த 1988 ம் ஆண்டு இந்திய படையினைரை வெளியேற பல கோரிக்கைகளை வைத்து மட்டக்களப்பு மாமாங்கம் ஆலய முன்றலில் அன்னையர் முன்னணி தலைமையில் அன்னை பூபதி சாகும்வரையிலான உண்ணாவிரத்தினை மாச் மாதம் 19ம் திகதி ஆரம்பித்து ஏப்பிரல் மாதம் 19 ம் திகதி உயிர் நீத்தார்.
இந்த நிலையில் இன்று அன்னை பூபதியம்மாவின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வை அவரது சமாதியில் நினைவு கூருவதற்கு அவரது மகள் ஏற்பாடுகளை செய்து காவல்த்துறையிடம் அனுமதி கோரிய நிலையில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலையில் மாமாங்கத்திலுள்ள பூபதியம்மாவின் மகளின் வீட்டிற்கு சென்ற காவல்த்துறையினர் வழங்கிய அனுமதியை நாட்டின் சூழ்நிலை காரணமாக அந்த அனுமதியை ரத்து செய்துள்ளனர்.
இதன் காரணமாக இன்றை நாள் அன்னை பூபதியின் நினைவேந்தலை செய்யமுடியாமல் போயுள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை காலையில் குறித்த சமாதியில் நினைவேந்தல் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்தார் இந்த நிலையில் அன்னை பூபதியின் மகள் தனது வீட்டில் அன்னையின் உருவப்படத்திற்கு மாலர்மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி நினைவு கூர்ந்துள்ளார்.