தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத, எவருமே சாதித்திராத, மகத்தானை மனித அர்ப்பணிப்புக்களைக் கொண்டதாக எமது விடுதலைப் போராட்டம் புகழீட்டி நிற்கிறது.இந்த அற்புதமான தியாக வரலாற்றில் அன்னைபூபதி ஒரு உன்னதமான , தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.சத்தியத்திற்காகச் சாகத் துனிந்துவிட்டால் ஒரு சாதாரன மனிதப் பிறவியும் சரித்திரத்தை படைக்க முடியும்.இதற்கு அன்னைபூபதியின் தியாகம் ஒருசிறப்பான எடுத்துக்காட்டு. சத்தியத்திற்காக, தர்மத்திற்காக அவர் சாவை அரவனைத்துக் கொண்டார். இந்த ஒப்பற்ற ஈகையால் ஒரு சாதாரண தாயான அவர், அசாதாரண சாதனையைப் புரிந்து தேசியத்தாய் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார்.