அபகரிக்கப்பட்ட துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம்!

You are currently viewing அபகரிக்கப்பட்ட துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம்!

தமிழ் மக்களால் வருடம்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்,கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லம் ( டடிமுகாம்), அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் இறுதி யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம்,இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்,பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லம், இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய துயிலும் இல்லங்கள் மக்களால் புனித பூமியாக பேணப்பட்டு வந்தது. 

அபகரிக்கப்பட்ட துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம்! 1

இந்நிலையில் 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் இந்த துயிலும் இல்லங்கள் இடித்தழிக்கப்பட்டு சில துயிலும் இல்ல காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், ஆகியவை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.

அபகரிக்கப்பட்ட துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம்! 2

இவற்றை விடுவிக்க கோரி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இவ்வாற பின்னணியில் அளம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல  காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர்.

அபகரிக்கப்பட்ட துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம்! 3

இதில் குறித்த தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி  இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான மாவீரர்களின் உறவினர் 4 பேருந்துகளில் சுமார் 400 பேரும் கிராம மக்களும் இணைந்து   குறித்த இடத்திற்கு வந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் வாக்குவாதங்களை அடுத்து குறித்த பகுதியில் புதைகுளி அமைந்துள்ள பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply