அப்பாவிகளிற்கு புலிச்சாயம் பூசி செய்தி கசிய விடும் சிறிலங்கா அரசு!

You are currently viewing அப்பாவிகளிற்கு புலிச்சாயம் பூசி செய்தி கசிய விடும் சிறிலங்கா அரசு!

யாழ்.வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வாா் கோவிலுக்கு அருகில் வெடிபொருட்களுடன் கைது செய்ய ப்பட்டவா்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் எனவும், அவா்கள் முக்கிய தமிழ் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டனா் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்தவாரம் இராணுவப் புலனாய்வு பிரிவினர், பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் இணைந்து வடமராட்சி வல்லிபுர ஆலயத்திற்கு அருகில் வீடொன்றை சுற்றிவளைத்தனர். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.இதன்போது வீட்டிலிருந்து நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், அண்மையில் தயாரிக்கப்பட்ட நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. இந்த சுற்றிவளைப்பிற்கு முன்னதாக, ஜேர்மன் கடவுச்சீட்டை கொண்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே இந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது.

தற்போது அந்த வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சில வலையமைப்புக்கள் ஊடாக இந்த குழுவிற்கு நிதியளிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக

பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இந்த உறுப்பினர்கள் சக்திவாய்ந்த வெடிபொருட்களைப் பயன்படுத்துவது குறித்தும் சிறப்புப் பயிற்சியினைப் பெற்றனர் என்று ஒரு அதிகாரி கூறினார். மலேசியா மற்றும் இந்தியாவில் உள்ள முன்னாள் புலிகளின் தலைவர்கள்

நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளனர். இவர்களை இயக்கிய வலையமைப்பைக் கண்டறிய வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் உதவியை இலங்கை அதிகாரிகள் நாடியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தின.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் அண்மையில் இந்த வலையமைப்பின் வளர்ச்சியைத் தொடர்ந்து நாங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய குறிப்பு:
சிங்கள அரசு தமிழ் மக்களிற்கு எதிரான இனவாதக்கொள்கைகளை தடைகளின்றி இலகுவான முறையில் நடைமுறைப்படுத்திற்கு நீண்ட காலமாக வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜதந்திரிகளிற்கு பல கோடி பெறுமதியான சலுகைகளை வழங்கிவருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயமாகும். சிங்கள அரசின் ராஜதந்திர வேலைத்திட்டங்களில் சிங்கள பெண்களை பாலியல் ரீதியில் ஈடுபடுத்துதல், மற்றும் உல்லாச வாழ்விற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் என்பனவும் அடங்கும்.

பகிர்ந்துகொள்ள