அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா அதைப் பெறாது. நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.