கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க, மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. மோப்ப நாய்கள் மூலம் மலேரியா தாக்கியவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் அமெரிக்காவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதில் பலருக்கு அறிகுறிகளே இல்லாமலும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றை, அதன் துர்நாற்றத்தைக் கொண்டு கண்டறிவதற்காக, பெனிசில்வேனியா பல்கலைக்கழகம் நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளித்து வருகிறது.
ஏற்கனவே மோப்ப நாய்கள் மூலம் மலேரியா தாக்கியவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். இயல்பாகவே வைரஸிற்கு உள்ள துர்நாற்றத்தன்மையைக் கொண்டு, இந்த நாய்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்காக ரெட்ரீவர் வகை நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸால், வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்பட்டுவரும் இந்த வேளையில், கொரோனா பாதித்தவர்களை கண்டறிய மோப்ப நாய்களைப் பாவிப்பது சரியானதா!