அமெரிக்காவின் “Kentucky” மாநிலத்தில் தொடர் போராட்டங்கள்! 7 பேர் மீது துப்பாக்கிச்சூடு!!

You are currently viewing அமெரிக்காவின் “Kentucky” மாநிலத்தில் தொடர் போராட்டங்கள்! 7 பேர் மீது துப்பாக்கிச்சூடு!!

அமெரிக்காவின் “Kentucky” மாகாணத்தின் “Louisville” பிரதேசத்தில் தொடர்போராட்டங்கள் தலைதூக்கியிருப்பதால், அங்கு பொதுச்சொத்துக்களுக்கும், தனியார் உடமைகளுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

கடந்த மார்ச் மாதம் “Breonna Taylor” என்ற கறுப்பினப்பெண்மணி அங்கு சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து மெதுவாக துளிர்விட்டிருந்த, காவல்த்துறையினருக்கெதிரான போராட்டங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்னர், “George Floyd” என்ற கறுப்பினத்தவர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட வேளையில், காவல்த்துறையினரின் அடாவடித்தனத்தால் கொல்லப்பட்டதையடுத்து மிகத்தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அமெரிக்க காவல்த்துறையினரால் அடாவடியாக கொல்லப்பட்ட கறுப்பின மக்களின் உறவினர்களும்போராட்டங்களில் குதித்துள்ளதால், “Louisville” பகுதியில் நிலைமைகள் கட்டுப்பாடுகளை மீறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின்

மாநிலத்தின் ஆளுநர், போராட்டங்களை விடுத்து, அமைதியான முறையில் நியாயங்களுக்கான தேடல்களை நடத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தாலும், காலங்காலமாக தங்கள் அமெரிக்க காவல்த்துறையால் அடக்குமுறைகளுக்கு உள்ளாவதாக தெரிவித்திருக்கும் கறுப்பின மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாமலிருப்பதாக தெரிவித்திருக்கும் மாநிலத்தின் ஆளுநர், அமெரிக்க தேசிய பாதுகாப்புப்படைகளின் உதவிகளை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடங்களில் நின்று, போராட்டங்களை நேரலை செய்துகொண்டிருந்த அமெரிக்க செய்திநிறுவனமான “CNN” தொலைக்காட்சியுடைய செய்தியாளர் குழுவும் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால், 7 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை கொள்ளையடிக்க முயன்றால், இராணுவம் அங்கு அனுப்பப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது “Twitter” வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின்

அமெரிக்க அதிபரின் மேற்படி பதிவு, வன்முறைகளை தூண்டுவதாக இருப்பதாக, “Twitter” நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் பிறிதொரு செய்தி தெரிவிக்கிறது.

பகிர்ந்துகொள்ள