ஆப்கானிஸ்தானில் வன்முறையை ஒரு வார காலம் குறைப்பதற்கான அமெரிக்கா- தலிபான் இடையேயான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு முதல் (சனிக்கிழமை) இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி (Ashraf Ghani) இது நடைமுறைக்கு வந்துள்ளதாக தொலைக்காட்சி உரையில் அறிவித்துள்ளார். தொடர்ந்து ஆப்கானிய படைகள் தற்காப்பு நிலைப்பாடுகளை எடுக்கும் என்றும், மேலும் அல்-கொய்தா(al-Qaida) மற்றும் ஐ.எஸ்ஸுக்கு (IS)எதிரான போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் என்பது ஒரு வாரத்திற்கு வன்முறையைக் குறைப்பதாக அமையும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு சாத்தியமானால், பிப்ரவரி பிற்பகுதியில் மேலும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டம் உள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் அமெரிக்க வீரர்களை திரும்பப் பெறுவதை சாத்தியமாக்கும் எனவும் நம்பப்படுகின்றது.