அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை !

You are currently viewing அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை !

அமெரிக்கா வொஷிங்டன் டிசி நகர மையத்தில் அமைந்துள்ள ஒரு யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) தெரிவித்துள்ளார்.

தலைநகர் யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும் போது பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக சந்தேகிக்கப்படுகின்றது. அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (21) இரவு 9:05 மணிக்கு எஃப் தெருக் வடமேற்கில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இது ஏராளமான சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களைக் கொண்ட பகுதியில் FBI இன் வொஷிங்டன் கள அலுவலகம் அடங்கும்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் இஸ்ரேலிய தூதரகத்தின் பல ஊழியர்கள் ஒரு அருங்காட்சியக நிகழ்வில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply