அமெரிக்காவில் புதுவருடதினத்தன்று பொதுமக்கள் மீதுமோதிய டிரக்; 10பேர் பலி ; பலர் காயம் !

You are currently viewing அமெரிக்காவில் புதுவருடதினத்தன்று பொதுமக்கள் மீதுமோதிய டிரக்; 10பேர் பலி ; பலர் காயம் !

அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுவருடதினத்தன்று பொதுமக்கள் அதிகமாக காணப்பட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் போர்பென் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிரக் வண்டியொன்று வேகமாக வந்து பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அதிலிருந்த நபர் ஒருவர் இறங்கி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்,பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட 30க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply