அமெரிக்காவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 30 பேர் பலி !

You are currently viewing அமெரிக்காவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 30 பேர் பலி !

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நாட்டின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் பேருந்து ஒன்று பாலத்திலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தையடுத்து குவாத்தமாலா நாட்டின் ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ, மூன்று நாட்கள் தேசியத் துக்கத்தை அறிவித்துள்ளார்.

இதேவேளை விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply