அமெரிக்காவில் 1,600 விமானங்களை ரத்து செய்த பிரபல நிறுவனங்கள்!

You are currently viewing அமெரிக்காவில் 1,600 விமானங்களை ரத்து செய்த பிரபல நிறுவனங்கள்!

அமெரிக்காவில் பாரிய பனிப் புயல் பாதிப்பை அடுத்து 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் 12 மாகாணங்கள் பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை மொத்தமாக ஸ்தம்பித்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மொத்தமாக 1,643 விமானங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 1,238 விமானங்கள் தாமதமாகலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று Midwest பகுதியில் உள்ள அசாதாரண வானிலை காரணமாக சில விமான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பிராந்தியத்தில் குளிர்கால வானிலை காரணமாக நாளையும் பாதிப்புகள் நீடிக்கலாம் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Southwest விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடும் பனிப்புயல் காரணமாக Chicago, Detroit மற்றும் Omaha பகுதிகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேகமூட்டம், பனிமூட்டம் மற்றும் காற்று காரணமாக குறிப்பிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று அமெரிக்காவின் FAA அமைப்பு வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Southwest விமான சேவை நிறுவனம் இதுவரை 355 விமானங்களை ரத்து செய்துள்ளது. SkyWest நிறுவனம் 275 விமானங்களையும் United விமான சேவை நிறுவனம் 258 விமானங்களையும் இதுவரை ரத்து செய்துள்ளனர்.

மொத்தமாக 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ள நிலையில் பயணிகள் கடும் அவதிக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply