இஸ்ரேல் ஹமாஸ் பதற்றத்திற்கு மத்தியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட கருத்தானது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இந்து சமுத்திரம் மற்றும் செங்கடல் ஊடக பயணம் செய்யும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கப்பல்களை தமது தாக்குதலின் இல்லக்காக கொண்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல் நகர்வானது சர்வதேச வர்த்தகத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
வழமையாக செங்கடலில் தமது தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தற்போது இந்து சமுத்திரத்தில் பயணம் செய்யும் கப்பல்களை இலக்குவைத்துள்ளனர்.
எனினும் குறித்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்க தரப்பு எவ்வித தகவலையும் இதுவரை வழங்காத நிலையில், அவ்வாறு கப்பல்கள் தாக்கப்பட்டிருந்தால் அது சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளதாக வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன்காரணமாக பிரதான பயண மார்க்கங்களான இந்து சமுத்திரம் மற்றும் செங்கடல் மார்க்கங்கள் மிக மோசமாக பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும் செங்கடல் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து சந்தைகளில் அச்சநிலை குறைவடைந்துள்ளதுடன் தாமதங்கள் குறித்த அச்சங்களும் நீங்கியுள்ளன.