அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த வடகொரியா!

You are currently viewing அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த வடகொரியா!

வட கொரியாவின் வான் பரப்பில் அமெரிக்க உளவு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் குற்றம்சாட்டியுள்ளார். வட கொரிய நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் 8 முறை அமெரிக்க உளவு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்( Kim Yo Jong) குற்றம்சாட்டியுள்ளார் என அந்நாட்டின் அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.

அத்துடன் இத்தகைய அத்துமீறிய நுழைதல் தொடருமானால் அமெரிக்க படைகள் மிகவும் தீவிரமான சண்டையை எதிர் கொள்ள வேண்டும் என்றும் கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.

மேலும் திங்கட்கிழமை நடத்த அத்துமீறல் போன்று மீண்டும் அமெரிக்க உளவு விமானங்கள் வான்வெளியில் அத்துமீறினால் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க உளவு விமானங்கள் வட கொரியாவின் கங்வோன் மாகாணத்தின் டோங்சோனுக்கு கிழக்கே 435கிமீ மற்றும் உல்ஜினுக்கு தென்கிழக்கே 276 கிமீ தொலைவில் உள்ள கடலுக்கு மேலே உள்ள வான்பரப்பில் அத்துமீறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட கொரியாவின் குற்றச்சாட்டை அமெரிக்காவின் பென்டகன் மறுத்துள்ளது, மற்றும் சர்வதேச விதிகளை முறையாக அமெரிக்க கடை பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் வடகொரியாவின் குற்றச்சாட்டுகள் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே என பென்டகன் செய்தி தொடர்பாளர் சப்ரினா சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply