அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூறாவளி புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது.
இந்த பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 800 மத்திய அவசரகால மேலாண் கழக அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூறாவளியால் அமெரிக்காவில் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கின்றது.