அமெரிக்காவில் அதிபர் தேர்தலையடுத்து, புதிய அதிபராக “Joe Biden” எதிர்வரும் 20.01.2021 அன்று பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, “Honduras” உட்பட, மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து மக்கள் கால் நடையாக, “Guatemala”, “Mexico” ஆகிய நாடுகளூடாக அமெரிக்காவை சென்றடைய முயற்சிப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்தின் இறுதியில் வீசிய புயலினால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளதாகவும், நிவாரணங்களேதும் தமக்கு வழங்கப்படவில்லையெனவும் கூறும் இம்மக்கள், அமெரிக்காவின் புதிய அதிபரின் ஆட்சியில் தமக்கு நல்வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கையிலேயே தாம் அமெரிக்கா நோக்கி பயணப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த வருட இறுதியில், “Mexico” அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்காவின் புதிய அதிபர் “Joe Biden”, “El Salvador”, “Honduras”, “Guatemala” உள்ளிட்ட நாடுகளின் வறுமை நிலைகளின் காரணமாக, அங்கிருந்து “Mexico” வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேற்ற வாசிகள் தொடர்பில் இளக்க நிலையை கடைப்பிடிக்கப்போவதாக தெரிவித்ததாக சொல்லப்படும் நிலையில், குறித்த நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவை நோக்கி நகர்வதாக ஆயிரக்கணக்கில் தெரிவிக்கப்படுகிறது.