அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 10 நாடுகளின் தூதர்களை வெளியேற்ற துருக்கி முயற்சி!

You are currently viewing அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 10 நாடுகளின் தூதர்களை வெளியேற்ற துருக்கி முயற்சி!

அமெரிக்கா, கனடா ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளின் தூதர்களை வெளியேற்ற துருக்கி முயற்சிகளை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு அங்கமாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜேர்மனி, நெதர்லாந்து, நியூஸிலாந்து நோர்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் துதர்களை வரவேற்கப்படாத நபர்களாக (persona non grata) அறிவிக்க துருக்கி ஜனாதிபதி தாயிப் ஏர்டோகன் உத்தரவிட்டுள்ளார்.

வரவேற்கப்படாத நபர்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களின் ராஜதந்திர அந்தஸ்தை நீக்கக்கூடியதாகும். இவ்வாறு நீக்கப்பட்டால் அவா்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் அல்லது அந்நாட்டு தூதர்களாக அங்கீகரிக்கப்படாமல் போகலாம்.

துருக்கியின் செயற்பாட்டாளரான ஓஸ்மான் கவலாவை தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யுமாறு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜேர்மனி, நெதர்லாந்து, நியூஸிலாந்து நோர்வே, ஸ்வீடன் ஆகிய 10 நாடுகளில் துதர்கள் கூட்டறிக்கை மூலம் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே அவர்களின் இராதந்திர அந்தஸ்தை நீக்கும் வகையிலான உத்தரவை துருக்கி ஜனாதிபதி தாயிப் ஏர்டோகன் விடுத்துள்ளார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டமை மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு மேல் கவலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் அவா் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே 10 நாடுகள் இணைந்து கவலாவை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வாரம் கூட்டறிக்கையை வெளியிட்டன.

இந்நிலையில் எஸ்கிஷேஹிரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய துருக்கி ஜனாதிபதி தாயிப் ஏர்டோகன் 10 நாடுகளின் தூதர்களும் வரவேற்கப்படாத நபர்களாக உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என வெளி விவகாரத் துறை அமைச்சருக்கு உத்தரட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

துருக்கிக்கும் தூதர்களாக வருபவர்கள் துருக்கியைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் எனவும் ஏர்டோகன் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply