கொரோனா பரவல் குறித்து விசாரணை நடத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை சீனாவிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. உயிர் பயத்தையும் பொருளாதார சரிவையும் ஏற்படுத்தி வரும் இந்த வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பியதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா பரவலுக்கு அமெரிக்க அரசும் சீன அரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.
சீனா மீது தவறு இருந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து விசாரணை நடத்த விரைவில் அமெரிக்க வல்லுநர் குழு ஒன்று சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.