அமெரிக்காவில் தீவிர தேர்தல் நாடகம் நடந்து கொண்டிருக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 100,000 க்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று வாஷிங்டன் போஸ்ட் (Washington Post ) செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கை இதுவாகும் என்று செய்தித்தாள் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸின் (New York Times) கண்ணோட்டத்தின்படி, புதன்கிழமை புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை 92,660 ஆகும்.
Oklahoma, Nebraska, Iowa மற்றும் Virginia உள்ளிட்ட பதினேழு மாநிலங்களிலும் தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அதே நேரத்தில் 233,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.