திபெத்திய பகுதிகளுக்கு அமெரிக்க இராஜதந்திரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பொறுப்பான சீன அதிகாரிகள் மீது வாஷிங்டன் விசா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் திபெத் பிரதேசங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், திபெத் பயணிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு எமது தூதுவர்களால் சேவைகள் வழங்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் கவனம் செலுத்தி அமெரிக்க இராஜதந்திரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் திபெத் பிரதேசங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.