அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் “கொரோனா” தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக செய்திகள்வெளிவந்த நிலையில், அமெரிக்காவின் தீவிர ஆதரவு நாடான நோர்வேயில் அதன் பங்குச்சந்தையில் 0.98 விகித உடனடி வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதோடு, நோர்வேயின் பெற்றோலிய உற்பத்தியும் கொள்கலன்ஒன்றுக்கு 40 டொலர்களுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்எது.
தன்போதைய “கொரோனா” சூழ்நலையில் உலகளாவிய ரீதியில் பொருளாதார சமநிலை உருவாகியுள்ளசூழ்நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தின் சமநிலை முக்கியமானதாக தோக்கப்படுகிறது.
வழமையாகவே அமெரிக்காவில் அதிபர் தேர்தல் காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தை மையமாககொண்டிருக்கும் ஏனைய உலகநாடுகளின் பொருளாதார வைப்புக்கள் மற்றும் முதலீடுகளில் சிறிது வீழ்ச்சிஏற்படுவது வழமை என்றாலும், தற்போதுள்ள உலகளாவிய ரீதியிலான பொருளாதார சமச்சீரின்மை பலநாடுகளின் பொருளாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
நோர்வேயை பொறுத்தவரை அதன் பாரிய முதலீடுகள் அமெரிக்காவில் உள்ளதால், அமெரிக்காவில்நடைபெறும் கடுகு முனையளவு மாற்றமும் நோர்வேயின் பொருளாதாரத்தை அசைக்கக்கூடியதாகவேஇருக்கிறது.
அமெரிக்க அதிபர் “கொரோனா” தொற்றுக்கு ஆளாகியிருப்பதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் வீழ்ச்சி, எண்ணை விலையில் வீழ்ச்சியோடு, நோர்வேயின் நாணயப்பெறுமதியான “குரோணர்” வீழ்ச்சியைசந்தித்துள்ளதால், வழமையாக நோர்வேயின் “எண்ணை வருமான நிதியம்” பெற்றுக்கொள்ளும் வருமானத்தில்பின்னடைவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்படி பாதகமான நிலைமைகளால் தோர்வேயில் உள்ளூரிலும் பொருளாதார சமச்சீரின்மை எற்படும்வாய்ப்புக்கள் உள்ளதோடு, விலையேற்றமும் ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளதாக எதிர்வு கூறப்படுகிறது.