அமெரிக்க அதிபர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் – ஈரான்

You are currently viewing அமெரிக்க அதிபர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் – ஈரான்

அமொிக்க அதிபர் டொனால் டிரம் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என ஈரான் கூறியுள்ளது.

ஈரானில் மேற்குலகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமொிக்க அதிபர் டொனால் டிரம்ப் ருவிட்டரில் ஈரானில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைக் கொல்ல வேண்டாம் என்றும். ஈரான் மக்கள் மக்கள் சிறந்தவர்கள் என்றும் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.

டிரம்பின் இப்பதிவை நிராகரிப்பததாகவும், ஈரான் மக்களுக்காக முதலலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று ஈரானிய அரசாங்கத் தொடர்பாளர் அலி ரபீ ரொயிற்றர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ஈரானில் உக்கிரைன் பயணிகள் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெகிரானில் பல்கலைக்கழ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்வை நடத்தினர். அஞ்சிலி நிகழ்வு பின் போராட்டமாக மாறி ஈரான் அதிபர் பதவி விலக வேண்டும் என போராட்டதை முன்னெடுத்து வருகின்றனர்.

கலகத் தடுப்பு காவல்துறையினர் போராட்டக் காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் நீர் தாரைகைத் தாக்குதல்களை நடத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துள்ளனர். ஆனாலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு பின்னணியில் நின்று செயற்பட்டதாக பிரித்தானித் தூதுவர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது மேற்குலநாடுகள் ஆதரவை தெரிவத்து வருகின்ற நிலையில். அமொிக் அதிபர் டொனால்ட் டிரம்பும் தனது ஆதரவைத் தொிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள