அமெரிக்க அதிபர் “Donald Trump” மீது கண்டனத்தீர்மானம் கொண்டுவருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் என்ற தனது பொறுப்பு நிலையை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு “Donald Trump” மீது முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றபட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரையிலும் கண்டனத்தீர்மானத்திற்கு உள்ளாக்கப்பட்ட அமெரிக்க அதிபர்கள் வரிசையில் மூன்றாவதாக “Donald Trump” சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.